பொது செய்தி

தமிழ்நாடு

மகாளய அமாவாசையையொட்டி கடலூர் கடற்கரையில் தடை

Added : அக் 06, 2021
Share
Advertisement
கடலுார் : கொரோனா பரவல் காரணமாக, இன்று கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில், மகாளய அமாவாசையையொட்டி இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை செய்யப்பட்டுள்ளது.இறந்த முன்னோர்களுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில், நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில், கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு நாளை காலை ஏராளமானோர்

கடலுார் : கொரோனா பரவல் காரணமாக, இன்று கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில், மகாளய அமாவாசையையொட்டி இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை செய்யப்பட்டுள்ளது.

இறந்த முன்னோர்களுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில், நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில், கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு நாளை காலை ஏராளமானோர் வந்து கடலில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவர்.

இந்தாண்டு மகாளய அமாவாசை இன்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் உள்ளதால், கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க தடை செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X