பொது செய்தி

தமிழ்நாடு

கிரைம் செய்திகள் - கடலூர்

Added : அக் 06, 2021
Share
Advertisement
மதுபாட்டில் விற்றவர் கைதுவிருத்தாசலம்: ஆலடி சப் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் நேற்று பாலக்கொல்லை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கள்ளத்தனமாக மது விற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், பூ.மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், 24; என்பவரை கைது செய்து, 10 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மகனை தாக்கிய தந்தை கைது விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த

மதுபாட்டில் விற்றவர் கைது

விருத்தாசலம்: ஆலடி சப் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் நேற்று பாலக்கொல்லை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கள்ளத்தனமாக மது விற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், பூ.மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், 24; என்பவரை கைது செய்து, 10 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மகனை தாக்கிய தந்தை கைது
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த எம்.பரூரைச் சேர்ந்தவர் தருமன், 42; இவர் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வதால் மகன் சந்துரு,20; இடையக்குறிச்சியில் மாமனார் வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் தாய் சரஸ்வதி, தங்கை சரிதா ஆகியோரை குடிபோதையில் தருமன் துன்புறுத்தினார். சந்துரு நேரில் சென்று கேட்டார். ஆத்திரமடைந்த தருமன், மகனை திட்டி தாக்கி, மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தருமனை கைது செய்தனர்.

மணல் கடத்தியவர் கைது
விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று கச்சிபெருமாநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, டிராக்டரில் மணல் கடத்தி வந்த அதே பகுதி அய்யப்பன், 24; தே.கோபுராபுரம் கோவிந்தன், 40; மீது வழக்கு பதிந்து அய்யப்பனை கைது செய்தனர். கோவிந்தனை தேடி வருகின்றனர்.

மாணவி மர்ம மரணம்

திட்டக்குடி: பெரம்பலுார் மாவட்டம், கீழக்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகள் வினோதினி,18. இவர் கோவையிலுள்ள தனியார் கல்லுாரியில் படித்தார். இவரும், அவரது தாய் கண்ணகி ஆகியோர் ராமநத்தத்திலுள்ள தாய்மாமன் வீட்டில் தங்கியிருந்தனர். நேற்று முன் தினம் மதியம் வினோதினி துாக்குப் போட்டு இறந்தார். அவரது உடலை சொந்த ஊரான கீழக்குடிகாட்டிற்கு உறவினர்கள் எடுத்துச்சென்றனர். தகவலறிந்த ராமநத்தம் போலீசார் வினோதினியின் உடலைக் கைப்பற்றி சந்தேக மரணம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

மனைவியை தாக்கியவர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாளையம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி,29; இவரது மனைவி தீபிஷா,22; இவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு கருணாமூர்த்தி வீட்டில் இருந்த போது அழுத முதல் குழந்தையை துாக்காமல் இருந்தார். குழந்தை அழுவது தெரியவில்லையா என கணவரிடம் தீபிஷா கேட்டார். ஆத்திரமடைந்த கருணாமூர்த்தி மனைவியை திட்டி தாக்கினார். பலத்த காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் கருணாமூர்த்தி மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X