சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு புடவைகள் விநியோகித்தபோது பறிமுதல்

Added : அக் 06, 2021
Share
Advertisement
திண்டிவனம் : ஒலக்கூர் அருகே புடவை மற்றும் மது பாட்டில்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஒலக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்நெமிலி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு புடவை கொடுப்பதாக நேற்று மதியம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து விழுப்புரம் கோட்ட கலால் அலுவலர் பரமேஸ்வரி தலைமையில் போலீசார்
 வாக்காளர்களுக்கு புடவைகள் விநியோகித்தபோது பறிமுதல்

திண்டிவனம் : ஒலக்கூர் அருகே புடவை மற்றும் மது பாட்டில்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒலக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்நெமிலி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு புடவை கொடுப்பதாக நேற்று மதியம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து விழுப்புரம் கோட்ட கலால் அலுவலர் பரமேஸ்வரி தலைமையில் போலீசார் அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர்.

அதிகாரிகளைப் பார்த்ததும், புடவைகள் மற்றும் மது பாட்டில்களை அப்படியே போட்டு விட்டு தப்பிச் சென்றனர். உடன், அதிகாரிகள், 94 புடவைகள், 17 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து, ஒலக்கூர் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் நாராயணமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X