பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் வானூர் 22வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

Added : அக் 06, 2021
Share
Advertisement
வானுார் : 'அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றித் தரப்படும்' என வானுார் 22வது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் உறுதியளித்துள்ளார்.மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகம் வழிகாட்டுதலின் பேரில், கடப்பேரிக்குப்பம், ஒட்டை பகுதியில் 22வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஜோதி சிங்காரம் கூறுகையில், 'இப்பகுதியில் ஒன்றிய


வானுார் : 'அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றித் தரப்படும்' என வானுார் 22வது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் உறுதியளித்துள்ளார்.

மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகம் வழிகாட்டுதலின் பேரில், கடப்பேரிக்குப்பம், ஒட்டை பகுதியில் 22வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஜோதி சிங்காரம் கூறுகையில், 'இப்பகுதியில் ஒன்றிய கவுன்சிலராக நான் தேர்வு பெற்றால் 24 மணி நேர குடிநீர் வசதி செய்து தரப்படும். அனைத்து கிராமங்களுக்கும் சுகாதார மையம், சிமென்ட் மற்றும் தார் சாலை அமைக்கப்படும். அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றுவேன்.

வீடு இல்லாதவர்களுக்கு இலவச மனைப்பட்டா பெற்றுத் தரப்படும். கூரை வீடு இல்லாத கிராமங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.ஏரி, குளங்கள் தூர்வாரப்படும். இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வசதி செய்து தரப்படும். விவசாயிகளுக்கு பயிர் கடன் பெற்று தரப்படும். மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் வசதி மற்றும் தொழில் வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X