பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கியில் நகைக் கடனுதவி ரூ.20 லட்சமாக உயர்வு தலைவர் தங்க சேகர் பெருமிதம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
விழுப்புரம் : நகைக் கடனுதவி 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது என வங்கித் தலைவர் தங்க சேகர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கி வளவனுார் கிளை, கிழக்கு பாண்டி ரோடு கிளை மற்றும் திருச்சி நெடுஞ்சாலை கிளைகளின் புதிய நிர்வாகக்குழு தலைவர் தலைமையில் வங்கியில் பல்வேறு வளர்ச்சி பணிகள்


விழுப்புரம் : நகைக் கடனுதவி 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது என வங்கித் தலைவர் தங்க சேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கி வளவனுார் கிளை, கிழக்கு பாண்டி ரோடு கிளை மற்றும் திருச்சி நெடுஞ்சாலை கிளைகளின் புதிய நிர்வாகக்குழு தலைவர் தலைமையில் வங்கியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 234 நகர கூட்டுறவு வங்கிகளில், 100 கோடிக்கு மேல் சிறப்பாக செயல்படும் 16 வங்கிகளில் விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கியும் ஒன்று.விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோட்டில் வங்கியின் பாதுகாப்பு கருதி மதில் சுவர் கட்டுவதற்கும், முண்டியம்பாக்கத்தில் புதிய கிளை துவங்கவும், திருச்சி நெடுஞ்சாலை கிளைக்கு சொந்த கட்டடம் அமைப்பதற்கும், மனை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக சேவை வழங்க, மைய வங்கியில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழில் முனைவோருக்கு வீடு கட்டும் கடனுதவி 10 லட்சம் ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்த, மாநில பதிவாளர் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கத்தினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை 14 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. நகைக் கடனுதவி 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு தலைவர் தங்க சேகர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X