சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகன் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்

Added : அக் 06, 2021
Share
Advertisement
மயிலம் : மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.மயிலம், செண்டூர் சாலையைச் சேர்ந்தவர் பழனி மகன் கிருஷ்ணராஜ், 19; இவர் ஆரோவில்லில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.,யில் படித்து வருகிறார்.நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த கிருஷ்ணராஜை அவரது நண்பர்கள் இருவர் பைக்கில் அழைத்துச் சென்றனர். பகல் முழுதும் வீடு திரும்பாத நிலையில், இரவு கிருஷ்ணராஜ் திண்டிவனம்

மயிலம் : மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

மயிலம், செண்டூர் சாலையைச் சேர்ந்தவர் பழனி மகன் கிருஷ்ணராஜ், 19; இவர் ஆரோவில்லில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.,யில் படித்து வருகிறார்.நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த கிருஷ்ணராஜை அவரது நண்பர்கள் இருவர் பைக்கில் அழைத்துச் சென்றனர். பகல் முழுதும் வீடு திரும்பாத நிலையில், இரவு கிருஷ்ணராஜ் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பழனிக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்று பார்த்தபோது கிருஷ்ணராஜ் இறந்திருப்பது தெரியவந்தது.இதுகுறித்து பழனி, தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மயிலம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X