பொது செய்தி

தமிழ்நாடு

பிரியங்கா கைதை கண்டித்து புவனகிரியில் ஆர்ப்பாட்டம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
புவனகிரி : காங்.,கட்சி பொதுச் செயலாளர் பிரியங்காவை கைது செய்ததை கண்டித்து புவனகிரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அழகிரி பங்கேற்று பேசினார்.உத்தரபிரதேச மாநிலத்தில் அகில இந்திய காங்., கமிட்டி பொதுச் செயலாளர் பிரியங்கா கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து புவனகிரியில் காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் செந்தில்நாதன்

புவனகிரி : காங்.,கட்சி பொதுச் செயலாளர் பிரியங்காவை கைது செய்ததை கண்டித்து புவனகிரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அழகிரி பங்கேற்று பேசினார்.உத்தரபிரதேச மாநிலத்தில் அகில இந்திய காங்., கமிட்டி பொதுச் செயலாளர் பிரியங்கா கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து புவனகிரியில் காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.புவனகிரி நகர தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் மணிரத்தினம், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர்கள் கோவி பழனிச்சாமி, சேரன், சித்தார்த்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டாக்டர் செந்தில்வேலன், ரங்கமணி, சத்தியமூர்த்தி, மாவட்ட விவசாயப்பிரிவு தலைவர் குமார் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் அழகிரி பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.முன்னாள் பேரூராட்சி துணைச் சேர்மன் ராம்குமார், நிர்வாகிகள் சாம்பமூர்த்தி, ராதாகிருஷ்ணன்,திருமாவளவன், மாவட்ட துணைத்தலைவர்கள் அன்பழகன், கண்ணன், விநாயகம் கட்சி நிர்வாகிகள் ராஜாராமன், பன்னீர்செல்வம், செல்வராஜ், ரவி, மோகன்தாஸ், வட்டாரத் தலைவர் நாகராஜ், சிறுபான்மை பிரிவு முகமது அலி நிஜாம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகர வர்த்தக பிரிவு தலைவர் சேதுராமன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X