பலாத்காரம் நடந்த 9ம் நாளில் தண்டனை அறிவிப்பு; ஜெய்ப்பூர் கோர்ட் அதிரடி

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒன்பதாவது நாளில், குற்றச்செயலில் ஈடுபட்ட வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில், கடந்த 26ம் தேதி இரவு, 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.வழக்கு பதிவு செய்த போலீசார் அடுத்த நாள் கமலேஷ் மீனா, 25, என்பவரை கைது செய்தனர்.
raping, 20 years jail, Jaipur Court

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒன்பதாவது நாளில், குற்றச்செயலில் ஈடுபட்ட வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில், கடந்த 26ம் தேதி இரவு, 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.வழக்கு பதிவு செய்த போலீசார் அடுத்த நாள் கமலேஷ் மீனா, 25, என்பவரை கைது செய்தனர். குற்றத்தின் தன்மை கருதி தீவிரமாக செயல்பட்ட போலீசார், இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தயார் செய்தனர்.


latest tamil news


வழக்கு பதிவு செய்த 18 மணி நேரத்தில் 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்றமும் வழக்கு விசாரணையை உடனடியாகத் துவங்கியது. ஆதாரங்கள் அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்டன. நீதிமன்றம் செயல்பட்ட ஐந்து நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டு, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிறுமியை பலாத்காரம் செய்த கமலேஷ் மீனாவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட ஒன்பது நாட்களில் குற்றவாளிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது, பல்வேறு தரப்பிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-அக்-202115:30:14 IST Report Abuse
D.Ambujavalli பொள்ளாச்சி, குமரி வழக்குகளுக்கு வெள்ளிவிழா, பொன்விழா கொண்டாடிய பிறகாவது தீர்ப்பு வருமா? கேஸ்களை ராஜஸ்தான் கோர்ட்டுக்கு மாற்றிவிட்டால் என்ன ?
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
06-அக்-202115:26:09 IST Report Abuse
Rengaraj ஏதோ அத்தி பூத்தார் போல தீர்ப்பு இப்படி விரைந்து வருகிறது. தீர்ப்பு உடனே கிடைப்பதற்கு போலீஸ் நிர்வாகமே முக்கிய காரணம்.வாய்தா மேல் வாய்தா இப்படி நீண்டு கொண்டே செல்வதற்கு நீதிமன்ற நிர்வாகமே காரணம்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
06-அக்-202115:20:00 IST Report Abuse
Vena Suna பணக்காரனுங்களுக்கும் இது வர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X