பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணிகளுக்கு திருநங்கைகளால் தொல்லை வேலை வாய்ப்பு இல்லாததால் தொடரும் அவலம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : போக்குவரத்து சிக்னல், கோவில் உள்ளிட்ட பகுதி களில் சுற்றுலா பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் திருநங்கைகளுக்கு, வேலை வாய்ப்பு அளிக்க மாற்று திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.புதுச்சேரி மாநிலம் முழுதும் 250க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசிக்கின்றனர். இவர்களில் 113 பேருக்கு ஓட்டுரிமை உள்ளது. நிரந்தர வேலை வாய்ப்பு இல்லை. சில திருநங்கைகள், டைலரிங் உள்ளிட்ட சுய


புதுச்சேரி : போக்குவரத்து சிக்னல், கோவில் உள்ளிட்ட பகுதி களில் சுற்றுலா பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் திருநங்கைகளுக்கு, வேலை வாய்ப்பு அளிக்க மாற்று திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலம் முழுதும் 250க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசிக்கின்றனர். இவர்களில் 113 பேருக்கு ஓட்டுரிமை உள்ளது. நிரந்தர வேலை வாய்ப்பு இல்லை. சில திருநங்கைகள், டைலரிங் உள்ளிட்ட சுய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கின்றனர். எனினும், பெரிய அளவில் வருவாய் கிடைப்பது இல்லை.இதனால் சில திருநங்கைகள், போக்குவரத்து சிக்னல்கள், கோவில், கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களை மடக்கி, ஆசீர்வதித்து காசு கேட்கின்றனர்.பணம் தர மறுத்தால் அவர்களை சூழ்ந்து, வலுக்கட்டாயமாக பணம் பெறுகின்றனர். இதனால், சுற்றுலா பயணியர் முகம் சுளிக்கின்றனர்.நள்ளிரவில் ராஜிவ் சிக்னல் முதல் இந்திரா சிக்னல் வரை திருநங்கைகள் வரிசை கட்டி நிற்கின்றனர். வாகனங்களில் செல்வோரை மடக்குகின்றனர். இதே போல் வில்லியனுார் புறவழிச்சாலை, உறுவையாறு பாலம், நோணாங்குப்பம் பாலம் உள்ளிட்ட இடங்களில் நின்று, வாகனங்களை மடக்குகின்றனர்.

அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்களில் துப்புரவு பணியை திருநங்கைகளுக்கு வழங்க வேண்டும். அரசின் கூட்டுறவு நிறுவனமான பாண்லே பூத், அரசு வணிக வளாகங்களில் கடைகள் ஒதுக்கி கொடுக்கலாம்.இதன் மூலம் திருநங்கைகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.திருநங்கை ஷீத்தல் கூறியதாவது:புதுச்சேரியில் எத்தனை திருநங்கைகள் உள்ளனர் என முதலில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழகத்தை போல், திருநங்கைகளுக்கு என ஒதுக்குபுறமாக இருப்பிடம் அளிக்க

வேண்டும். வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்.திருநங்கைகளுக்கு யாரும் வீடு வாடகைக்கு கொடுப்பது இல்லை. அப்படியே கொடுத்தாலும், 3 மடங்கு உயர்த்தி வாடகை கேட்கின்றனர். இதனால், வேறு வழியின்றி திருநங்கைகள் பலரிடம் பணம் கேட்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.அரசு அலுவலகங்களில் துப்புரவு பணியை எங்களுக்கு கொடுத்தால் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.அதுபோல், பாண்லே பூத், அரசு வணிக வளாகங்களில் ஒரு கடை ஒதுக்கி கொடுத்தால், வாழ்க்கை நடத்த முடியும். இவற்றை அரசு செய்து கொடுத்தால், திருநங்கைகள் சமூகத்திற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X