பொது செய்தி

இந்தியா

காரைக்கால் - இலங்கை கப்பல் போக்குவரத்து எப்போது? வெளியுறவு துறை அனுமதிக்கு காத்திருப்பு

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி 'காரைக்கால் - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து, மத்திய வெளியுறவு துறை அனுமதி கொடுத்த பிறகு துவக்கப்படும்' என கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.புதுச்சேரி என்.சி.சி., சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் பாய்மர படகு கடல் சாகசப் பயணம், தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று துவங்கியது.கவர்னர் தமிழிசை கொடியசைத்து, சாகச பயணத்தை துவக்கி வைத்தார்.புதுச்சேரி
 காரைக்கால் - இலங்கை கப்பல் போக்குவரத்து  எப்போது?  வெளியுறவு துறை அனுமதிக்கு காத்திருப்பு

புதுச்சேரி 'காரைக்கால் - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து, மத்திய வெளியுறவு துறை அனுமதி கொடுத்த பிறகு துவக்கப்படும்' என கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

புதுச்சேரி என்.சி.சி., சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் பாய்மர படகு கடல் சாகசப் பயணம், தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று துவங்கியது.கவர்னர் தமிழிசை கொடியசைத்து, சாகச பயணத்தை துவக்கி வைத்தார்.புதுச்சேரி என்.சி.சி. குழும நிர்வாக அதிகாரி கர்னல் அருண் ஷர்மா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு என்.சி.சி., பிரிவின் கமாண்டிங் அதிகாரி ரவிசங்கர் தலைமையில், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 25 மாணவிகள், 35 மாணவர்கள் 3 பாய்மர படகுகளில் சாகசப் பயணத்தை துவக்கினர்.ஒரு கப்பற்படை அதிகாரி, 2 என்.சி.சி., அதிகாரிகள், 6 கப்பற்படை பயிற்சியாளர்கள், 27 அலுவலக பணியாளர்கள்

இதில் பங்கேற்றுள்ளனர்.சாகசக் குழுவினர் கடலுார், பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி வழியாக காரைக்கால் அடைகின்றனர். அங்கிருந்து புறப்பட்டு 302 கி.மீ., துாரத்தை 11 நாட்கள் பயணித்து, 15ம் தேதி புதுச்சேரியை வந்தடைகின்றனர்.கவர்னர் தமிழிசை கூறியதாவது;சவால்களை முறியடிப்பதற்கான வழிமுறைகளை இளைஞர்களுக்கு அளிக்கும் விதமாக, கடல் சாகச பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதற்கு என்.சி.சி.,யை பாராட்டுகிறேன்.புதுச்சேரியை சுற்றுலா தளமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

புதுச்சேரி - காரைக்கால் வரை கடல்வழி சுற்றுலா மற்றும் படகு சவாரி செய்வதற்கான ஒரு முன்னோட்டமாக இது அமையும் என நம்புகிறேன். சாகசப் பயணம் மேற்கொள்ளும் 60 பேரில், 25 பெண்கள் பங்கேற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சி தருகிறது.புதுச்சேரி - அந்தமான் இடையே கடல்வழி பயணம் துவக்கும் திட்டம் உள்ளது. காரைக்கால் - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தை மீண்டும் செயல்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. வெளியுறவுத் துறை ஒப்புதல் கிடைத்தவுடன், செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் சார்ந்த கருத்து கூற முடியாது. மக்களுக்கான அடிப்படை தேவைகளை வழங்குவது உள்ளாட்சி பிரதிநிதிகள் தான். உள்ளாட்சி பிரதிநிதிகள் விரைவாக கிடைத்தால் நல்லது.டெங்கு பற்றி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளோம். கொரோனாவை விட குழந்தைகளை அதிகம் பாதிக்கக் கூடியது

டெங்கு. அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.மக்கள் தங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டு, எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மருத்துவமனைகளில் முன்னேற்பாடுகளும், சிகிச்சை வழிமுறைகளுக்கும் தயாராக வைக்கப்பட்டுள்ளது.அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பாதாள சாக்கடை திட்டம் போன்ற திட்டங்கள் போடப்பட்டிருக்கிறது. மழைக் காலங்களில் நீரின் மூலம் ஏற்படும் நோய்கள் வரக்கூடும். அதனை எல்லோரும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X