பொது செய்தி

தமிழ்நாடு

மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய விவசாயிகள் மனு

Added : அக் 06, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : எடுத்தனுார் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.சங்கராபுரம் அடுத்த மணியந்தல், ஜம்படை, கரையாம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அளித்த மனு:எடுத்தனுார் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்குகிறது. சுற்று வட்டார பகுதிகளைச்
 மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய விவசாயிகள் மனு

கள்ளக்குறிச்சி : எடுத்தனுார் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

சங்கராபுரம் அடுத்த மணியந்தல், ஜம்படை, கரையாம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அளித்த மனு:எடுத்தனுார் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்குகிறது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன் பதிவு செய்து, நெல்மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு சென்றோம்.

ஆனால் கடந்த மாதம் 30ம் தேதியுடன் நெல் கொள்முதல் நிலையத்தை மூடிவிட்டார்கள். இதனால் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 3,500 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து அழுகியும், நாற்றாக முளைத்தும் உள்ளன.எனவே மீதமுள்ள விவசாயிகளின் நெல்மூட்டைகளையாவது கொள்முதல் செய்து எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X