பொது செய்தி

தமிழ்நாடு

உரக்கடைகள் மீது விற்பனை திணிப்பு; யூரியா ஸ்டாக் இல்லை என கைவிரிப்பு

Added : அக் 06, 2021
Share
Advertisement
சிவகங்கை : உரக்கடைகளுக்கு அரசு, உரங்களை விநியோகிக்கும் போது குறிப்பிட்ட அளவு யூரியா வாங்கினால் அதற்கேற்றார் போல் பொட்டாஷ் உள்ளிட்ட கலப்பு உரங்களையும் சேர்த்து விற்பனை செய்யவேண்டுமென திணிக்கிறது.தனியார் உரக்கடைகளில் யூரியா வாங்க விவசாயிகள் சென்றால் அதற்கேற்றார் போல் பொட்டாஷ், கலப்பு உரங்கள் வாங்கினால் மட்டுமே யூரியா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற உரங்களை

சிவகங்கை : உரக்கடைகளுக்கு அரசு, உரங்களை விநியோகிக்கும் போது குறிப்பிட்ட அளவு யூரியா வாங்கினால் அதற்கேற்றார் போல் பொட்டாஷ் உள்ளிட்ட கலப்பு உரங்களையும் சேர்த்து விற்பனை செய்யவேண்டுமென திணிக்கிறது.

தனியார் உரக்கடைகளில் யூரியா வாங்க விவசாயிகள் சென்றால் அதற்கேற்றார் போல் பொட்டாஷ், கலப்பு உரங்கள் வாங்கினால் மட்டுமே யூரியா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற உரங்களை விவசாயிகள் வாங்க மறுப்பதால் தனியார் உரக்கடைகள் யூரியா இல்லை என விவசாயிகளிடம் தெரிவிக்கின்றனர். அரசு தனியார் உரக்கடைகளுக்கு யூரியா விநியோகம் செய்யும் போது அதற்கேற்றார் போல் பொட்டாஷ் மற்றும் கலப்பு உரங்களை வாங்க வேண்டும், என நிர்ப்பந்திக்கிறது.

இதேபோல் உரக்கடைகள் விவசாயிகளிடம் நிர்ப்பந்தம் செய்து விற்பனை செய்கின்றனர். இதனை மறுக்கும் விவசாயிகளிடம் யூரியா இல்லை என்று தெரிவிக்கின்றனர். இது போன்ற செயல்களால் யூரியாவிற்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்தும் வருகின்றனர்.அரசு தரப்பில் 2800 மெட்ரிக் டன் யூரியா, 800 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 600 மெட்ரிக் டன் பொட்டாஷ்,1600 மெட்ரிக் டன் காம்பளக்ஸ் தொடக்க கூட்டுறவு சங்கங்கள், தனியார் உரக்கடைகளில் இருப்பு உள்ளன.

உரங்கள் இல்லை என்றால் வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் 0457- 240 409, வேளாண் உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு 98651 53344, வேளாண் உதவி அலுவலர் தரக்கட்டுப்பாடு 94431 63279 என்றஅலைபேசிகளில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X