பொது செய்தி

இந்தியா

பி.எச். சீரிஸ் வாகன பதிவு புதுச்சேரியில் அறிமுகம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் பி.எச். சீரிஸ் வாகன பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் வாகனங்களை சொந்த மாநிலத்தில் இருந்து பிற மாநிலத்தில் மாற்று வாகன எண் பதிவின் போது சிரமம் ஏற்படுகிறது.அதை தவிர்க்க, மத்திய சாலை

புதுச்சேரி : அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் பி.எச். சீரிஸ் வாகன பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் வாகனங்களை சொந்த மாநிலத்தில் இருந்து பிற மாநிலத்தில் மாற்று வாகன எண் பதிவின் போது சிரமம் ஏற்படுகிறது.அதை தவிர்க்க, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தாத வாகனங்களுக்கு பி.எச். சீரிஸ் எண்கள் பதிவு செய்து கொள்ளும் வசதியினை கடந்த 15ம் தேதி முதல், அறிமுகப்படுத்தி உள்ளது

இவ்வசதியை, மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், அரசு தன்னாட்சி அமைப்புகள், அலுவலகங்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ் வேறு மாநில அரசு, யூனியன் பிரதேச ஊழியர்கள் உள்ளிட்டோர், பயன்படுத்திக் கொள்ள முடியும்.இத்தகைய பதிவு முறை, வாகன உரிமையாளர்களின் சுய விருப்பத்தின்பேரில், அதற்குரிய படிவம் பெறப்பட்ட பிறகே செய்து தரப்படும்.

இந்த வாகன பதிவின்படி பொது போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை சாலை வரி செலுத்த வேண்டும். 15 ஆண்டிற்கு பிறகு, ஆண்டுதோறும் வரி செலுத்த வேண்டும்.மேலும் விபரங்களுக்கு http://transport.py.gov.in என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X