பார்த்திபனுார் : பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனுார் அன்னதான விநாயகர் கோயில் முன்புறமுள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் உத்தரவுப்படி 6 சென்ட் இடம் மீட்கும் பணி நடந்தது. பரமக்குடி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில், அறநிலையத்துறை நில அளவை குழுவினர், வி.ஏ.ஓ., வருவாய் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் 3 ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த இடத்தின் மதிப்பு ரூ.11 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.