சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணியை தரக்குறைவாக நடத்திய டாக்டர், நர்ஸ்கள் குறித்து புகார்

Added : அக் 06, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணியை தரக்குறைவாக பேசிய மருத்துவர், செவிலியர்கள் குறித்து 104க்கு சென்ற புகாரால்மாவட்ட அதிகாரி பாதிக்கப்பட்டவர்களை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.காரைக்குடி சூரக்குடி சாலை அரசு மருத்துவமனைக்கு கர்ப்பணி ஒருவர் ஆலோசனைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் மற்றும்

காரைக்குடி : காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணியை தரக்குறைவாக பேசிய மருத்துவர், செவிலியர்கள் குறித்து 104க்கு சென்ற புகாரால்மாவட்ட அதிகாரி பாதிக்கப்பட்டவர்களை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

காரைக்குடி சூரக்குடி சாலை அரசு மருத்துவமனைக்கு கர்ப்பணி ஒருவர் ஆலோசனைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் படுக்கை வசதி இல்லை, கீழே தான் படுக்க வேண்டும் என்று கூறியதோடு மரியாதை குறைவாகவும் பேசியுள்ளனர்.அதிர்ச்சியடைந்த கர்ப்பிணியும், அவரது கணவரும் மருத்துவமனையை விட்டு சென்றதோடு, 104க்கு புகார் அளித்துஉள்ளனர்.

புகாரின் பேரில், உடனடியாக கர்ப்பிணியை தொடர்பு கொண்ட மாவட்ட இணை இயக்குநர், கர்ப்பிணிக்கு ஆறுதல் கூறியதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை கிடைக்காதது குறித்து யாரிடம் புகார் தெரிவிப்பது என்று நோயாளிகள் தவித்து வரும் நிலையில், 104 என்ற புகார் எண்ணால் உடனடி தீர்வு கிடைத்தது நோயாளிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X