பொது செய்தி

இந்தியா

வாழ்வுறுதி சான்றிதழ் அளிக்க ஓய்வூதியம் பெறுவோருக்கு அவகாசம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : அரசு கருவூலகம் மூலம் ஓய்வூதியம் பெறுவோர், வரும் 31ம் தேதிக்குள் வாழ்வுறுதி சான்றிதழ் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கணக்கு மற்றும் கருவூல இயக்கக இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசு கருவூலகம், உதவிக் கருவூலகத்தில் ஓய்வூதியம் பெற்று, வாழ்வுறுதிச் சான்றிதழ் அளிக்காத ஓய்வூதியர்கள், குடும்ப

புதுச்சேரி : அரசு கருவூலகம் மூலம் ஓய்வூதியம் பெறுவோர், வரும் 31ம் தேதிக்குள் வாழ்வுறுதி சான்றிதழ் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கணக்கு மற்றும் கருவூல இயக்கக இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசு கருவூலகம், உதவிக் கருவூலகத்தில் ஓய்வூதியம் பெற்று, வாழ்வுறுதிச் சான்றிதழ் அளிக்காத ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் அனைவரும், வாழ்வுறுதிச் சான்றிதழை வரும் 31ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.ஓய்வூதியர்கள், நேரடியாகவோ, இணைய வழியாகவோ வாழ்வுறுதிச் சான்றிதழை அளிக்கலாம். புதுச்சேரி அரசு கருவூலகம் அல்லது உதவிக் கருவூலக அலுவலர்கள் முன்னிலையில் நேரில் வந்து வாழ்வுறுதி சான்றிதழைப் பதிவு செய்யலாம்.

அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் உரிய படிவத்துடன், வாழ்வுறுதி சான்றிதழை அளிக்கலாம்.ஆதார் அடிப்படையிலான வாழ்வுறுதி சான்றிதழை 'ஜீவன் பிரமாண்' என்னும் இந்திய அரசின் www.JeevanPramaan.gov.in என்ற இணையதளத்தின் வழியாகப் பதிவிறக்கம் செய்து, dat.pon@nic.in என்ற மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பலாம் பொதுத் துறை வங்கிகளின் மூலம், இருப்பிடம் தேடிச் சென்று வங்கி சேவை அளிக்கும் முறையில் வாழ்வுறுதி சான்றிதழை அளிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு கணக்கு மற்றும் கருவூலக இயக்ககத்தின் dat.py.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X