பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.22 கோடி செலவில்கடல் பூங்கா அமைக்கும் பணி

Added : அக் 06, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சக்கரகோட்டை கிழக்கு கடற்கரை சாலையில், சிப்காட்தொழில் நிறுவனம் மூலம், ரூ.22கோடியில் 50 ஏக்கரில் கடல்பூங்கா அமைக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.ராமநாதபுரம் சிறுதொழில் வளர்ச்சி கழகம் சார்பில், ஜப்பான் பன்னோக்கு கூட்டுறவு முகவை உதவியுடன் சக்கரக்கோட்டை ஊராட்சி கிழக்கு கடற்கரை சாலைப்பகுதியில் 100 ஏக்கரில் ரூ.22கோடியில் கடல்பூங்கா அமைக்கப்பட

ராமநாதபுரம் : ராமநாதபுரம் சக்கரகோட்டை கிழக்கு கடற்கரை சாலையில், சிப்காட்தொழில் நிறுவனம் மூலம், ரூ.22கோடியில் 50 ஏக்கரில் கடல்பூங்கா அமைக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் சிறுதொழில் வளர்ச்சி கழகம் சார்பில், ஜப்பான் பன்னோக்கு கூட்டுறவு முகவை உதவியுடன் சக்கரக்கோட்டை ஊராட்சி கிழக்கு கடற்கரை சாலைப்பகுதியில் 100 ஏக்கரில் ரூ.22கோடியில் கடல்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இங்கு கடந்த 2019ல் 50 ஏக்கரில் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டது.இதில் தொழில் மனை வளாகங்கள், மீன்பிடி தொழில் தொடர்பான கட்டமைப்புகள் ஏற்படுத்தி, மீன் உணவு வகைகள் தயாரித்தல், மீன்பிடி வலைகள், படகு தயாரித்தல் போன்ற சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக மனை வளாகங்கள் பிரிக்கப்பட்டு, ரோடு அமைத்தல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் ஏழு தொழில் நிறுவனங்கள்ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து குடிநீர்தொட்டி அமைத்தல், அலுவலக வளாகம் அமைத்தல் பணிகள், தொழில்பேட்டை வரவேற்பு பிளக்ஸ் போர்டு வைப்பது ஆகிய பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ஓரிரு மாதத்தில் கடல்பூங்கா தொழிற்பேட்டையில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படஉள்ளதாக 'சிப்காட்'அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X