பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 4 ஒன்றியங்களுக்கு முதல் கட்ட தேர்தல்... 1,701 பதவியிடங்களுக்கு 5,717 பேர் போட்டி

Added : அக் 06, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 ஒன்றியங்களுக்கு இன்று நடைபெறும் முதல் கட்ட தேர்தலில், 774 ஓட்டுச்சாவடிகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மக்கள் அச்சமின்றி ஓட்டு போடலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில், ரிஷிவந்தியம், திருக்கோவிலுார், திருநாவலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 4 ஒன்றியங்களுக்கு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 ஒன்றியங்களுக்கு இன்று நடைபெறும் முதல் கட்ட தேர்தலில், 774 ஓட்டுச்சாவடிகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மக்கள் அச்சமின்றி ஓட்டு போடலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில், ரிஷிவந்தியம், திருக்கோவிலுார், திருநாவலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 4 ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. 268 ஒரு வார்டு ஓட்டுச்சாவடிகள், 671 இரு வார்டு ஓட்டுச்சாவடிகள் என மொத்தம் 939 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 603 ஆண், 2 லட்சத்து 33 ஆயிரத்து 776 பெண், 85 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 72 ஆயிரத்து 568 வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர்.இந்த 4 ஒன்றியங்களில் 10 மாவட்ட கவுன்சிலர்கள், 89 ஒன்றிய கவுன்சிலர்கள், 217 ஊராட்சித் தலைவர்கள், 1,608 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 1,924 பதவியிடங்களில்; 1 மாவட்ட கவுன்சிலர், 14 ஊராட்சித் தலைவர்கள், 208 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 223 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மீதமுள்ள 9 மாவட்ட கவுன்சிலருக்கு 66 பேர், 89 ஒன்றிய கவுன்சிலருக்கு 417 பேர், 203 ஊராட்சித் தலைவருக்கு 782 பேர், 1,400 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 4,452 பேர் என 1,701 பதவியிடங்களுக்கு 5,717 பேர் போட்டியிடுகின்றனர்.

மாவட்ட கவுன்சிலருக்கு மஞ்சள் நிற சீட்டு, ஒன்றிய கவுன்சிலருக்கு பச்சை நிற சீட்டு, ஊராட்சித் தலைவருக்கு இளஞ்சிவப்பு நிற சீட்டு, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வெள்ளை அல்லது ஊதா நிற சீட்டு பயன் படுத்தப்படுகிறது.இந்த 4 ஒன்றியங்களை, 69 மண்டலங்களாக பிரித்து, பொருட்களை ஓட்டுச்சாவடிகளுக்கு கொண்டு செல்லுதல், தேர்தல் முடிந்ததும் ஓட்டுபெட்டிகளை, ஓட்டு எண்ணும் மையத்திற்கு அன்று இரவே போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பும்பணி மேற்கொள்ளப்படுகிறது.கொரோனா பாதுகாப்பு பொருட்களைக் கொண்டு செல்ல 30 ஓட்டுச்சாவடிகளுக்கு ஒரு வாகனம் வீதம் 32 சிறப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.தேர்தல் பணியில் 207 மண்டல அலுவலர்கள், 6,304 ஓட்டுச்சாவடி பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.முதல்கட்ட தேர்தலில் 81 ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

84 ஓட்டுச்சாவடிகளில் வீடியோ பதிவு கண்காணிப்பும், 84 ஓட்டுசாவடிகளில் மத்திய அரசு அலுவலர்கள் நுண்பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டு தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.சென்னை ஐகோர்ட் மற்றும் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, 774 ஓட்டுச்சாவடிகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மக்கள் எவ்வித அச்சமும் இன்றி ஓட்டளிக்குமாறு கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X