ரோடு வசதி இல்லாத பாப்பான்வலசை கிராமம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
பூவந்தி : பூவந்தி ஊராட்சிக்குட்பட்ட பாப்பான்வலசை கிராமத்திற்கு தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என ஊராட்சி தலைவர் விஜயா கோரிக்கை விடுத்துள்ளார்.பாப்பான்வலசை கிராமத்தில் 300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்திற்கு சிவகங்கை - மதுரை சாலையில் இருந்து செம்மண் ரோடு செல்கிறது. மழை காலங்களில் சகதியுமாக மாறிவிடுவதால் கிராமமக்கள்

பூவந்தி : பூவந்தி ஊராட்சிக்குட்பட்ட பாப்பான்வலசை கிராமத்திற்கு தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என ஊராட்சி தலைவர் விஜயா கோரிக்கை விடுத்துள்ளார்.

பாப்பான்வலசை கிராமத்தில் 300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்திற்கு சிவகங்கை - மதுரை சாலையில் இருந்து செம்மண் ரோடு செல்கிறது. மழை காலங்களில் சகதியுமாக மாறிவிடுவதால் கிராமமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.ஊராட்சி தலைவர் விஜயா கூறுகையில்:மெயின் ரோட்டில் இருந்து பாப்பான்வலசை வரை ஒரு கி.மீ., துாரத்திற்கு தனியார் பட்டா நிலம் வழியாக மக்கள் சென்று வருகின்றனர்.

வருவாய்துறையினர் நில உரிமையாளர்களிடம் பேசி கையகப்படுத்தி தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நில உரிமையாளர்கள் சாலைக்காக நிலம் விட்டுத்தர தயாராக உள்ள நிலையில் அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்கி தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணை தலைவர் மகாலிங்கம் கூறுகையில்; ஆதிதிராவிட மக்கள் வீடுகளில் திருமணம் போன்ற விசேஷங்கள் நடத்த வசதியாக சமுதாய கூடம் காலனி பகுதியில் அமைக்க வேண்டும், அங்கன்வாடி மையங்கள் இல்லாததால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு உரிய வழிகாட்டு முறைகளை செயல்படுத்த முடிவதில்லை. எனவே அங்கன்வாடி மையம் காலனி பகுதியில் அமைக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X