பொது செய்தி

தமிழ்நாடு

குவியும் குப்பையால் பாழாகும் சேதுக்கரை கடலோர பகுதி

Added : அக் 06, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : சேதுக்கரை கடற்பகுதியில் குப்பை குவிந்துள்ளதால் சுகாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. இதனை சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே சேதுக்கரை ஜெய வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்குள்ள கடற்கரை பகுதியில் முன்ஜென்ம பாவங்கள் தீர, திருமண தடை, தோஷநிவர்த்தி உள்ளிட்ட பரிகாரபூஜை செய்து வழக்கமாகும்.

ராமநாதபுரம் : சேதுக்கரை கடற்பகுதியில் குப்பை குவிந்துள்ளதால் சுகாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. இதனை சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே சேதுக்கரை ஜெய வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்குள்ள கடற்கரை பகுதியில் முன்ஜென்ம பாவங்கள் தீர, திருமண தடை, தோஷநிவர்த்தி உள்ளிட்ட பரிகாரபூஜை செய்து வழக்கமாகும். தமிழகம் மட்டுமின்றி பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி,ஞாயிறு பக்தர்கள் தரிசனம், பரிகார பூஜை செய்வற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மகாளய அமாவாசைக்கும் பக்தர்கள்தரிசனம், நீராட தடைவிதிக்கப்பட்டுள்ளது.சேதுக்கரை கடலோரப்பகுதியில் பராமரிக்கப்படாமல் பக்தர்கள் விட்டுசென்ற பழைய துணிகள், குப்பை அகற்றப்படாமல் அப்படியே குவிந்து சுகாதாரக்கேடாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X