22.50 லட்சம் ரூபாய் மோசடி மாஜி பஞ்., தலைவர் மகன் கைது

Added : அக் 06, 2021
Share
Advertisement
வில்லியனுார் : வீட்டு மனை வாங்கிக் கொடுப்பதாக, ரூ.22.50 லட்சம் மோசடி செய்த வழக்கில், கரிக்கலாம்பாக்கம் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவரின் மகனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர். இவரது மகன் வாஞ்சிநாதன் (32).கரிக்கலாம்பாக்கம் வ.உ.சி., நகரை சேர்ந்தவர் சரவணன் (49). திருமண தாம்பூல துணி பை

வில்லியனுார் : வீட்டு மனை வாங்கிக் கொடுப்பதாக, ரூ.22.50 லட்சம் மோசடி செய்த வழக்கில், கரிக்கலாம்பாக்கம் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவரின் மகனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர். இவரது மகன் வாஞ்சிநாதன் (32).கரிக்கலாம்பாக்கம் வ.உ.சி., நகரை சேர்ந்தவர் சரவணன் (49). திருமண தாம்பூல துணி பை தயாரித்து வருகிறார்.வாஞ்சிநாதன், கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம், புதுச்சேரி பாரதிபுரத்தை சேர்ந்த கிரிஜா என்பவரின் வீட்டு மனையை, சரவணனுக்கு வாங்கித் தர, ரூ.8 லட்சத்திற்கு விலை பேசினார்.அட்வான்ஸ் தர வேண்டும் என ரூ. 4 லட்சத்தை சரவணனிடம் வாஞ்சிநாதன் பெற்றுக் கொண்டார்.

பின்னர், போலியான உடன்படிக்கை பத்திரம் தயாரித்து, கொடுத்துள்ளார்.அதை தொடர்ந்து, ஒதியம்பட்டு, திருக்காஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறைந்த விலைக்கு மனைகள் விற்பனைக்கு உள்ளதாக, ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பிய சரவணன், வாஞ்சிநாதன் கூறியதன் பேரில் ரூ. 18..50 லட்சம் பணத்தை, அவரது நண்பர்கள் 12 பேரின் வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளில் செலுத்தினார்.ஆனால் மனை எதுவும் வாங்கித் தரவில்லை. சரவணன் விசாரித்ததில், மனை உடன்படிக்கை ஒப்பந்தத்தில் போலி கையெழுத்து போட்டு பணம் அபகரித்ததும், நண்பர்களின் வங்கி கணக்கில் செலுத்திய பணம் முழுவதையும் வாஞ்சிநாதன் எடுத்துக் கொண்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்து வாஞ்சிநாதன் குடும்பத்தினரிடம் கூறி, பணத்தை திருப்பி கொடுக் குமாறு கேட்டார். அவர்கள் எங்களுக்கு தெரியாது என கைவிரித்தனர்.குடும்பத்தினரிடம் கூறியதால் ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன், சரவணன் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் சரவணன், கோர்ட்டில் முறையிட்டார். புகார் மீது நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.அதன்பேரில், மோசடியில் ஈடுபட்ட வாஞ்சிநாதன் மீது மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X