இரட்டை மடி பயன்படுத்திய விசைப்படகு உரிமையாளர்கள் மீது குற்றப்பத்திரிகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரட்டை மடி பயன்படுத்திய விசைப்படகு உரிமையாளர்கள் மீது குற்றப்பத்திரிகை

Added : அக் 06, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021ல் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்திய 44 மீனவர்கள் மீது 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் கடலில் மீன் வளம், இயற்கை வளங்கள்,

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021ல் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்திய 44 மீனவர்கள் மீது 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் கடலில் மீன் வளம், இயற்கை வளங்கள், பவளப்பாறைகள், அரியவகை உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றை தடுக்க இரட்டை மடி, சுருக்குமடி பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.இந்த தடைகளை மீறி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கின்றனர். இவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வழக்கு மற்றும் அபராதம் விதிக்கின்றனர்.

கடந்த செப்., வரை ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் 52 வழக்குகளும், மூக்கையூர் மீனவர்கள் மீது ஆறு வழக்குகளும் பதியப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது. இவர்களுக்கு ரூ.5.21 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு திட்டத்தில் கடல் பாசி வளர்ப்பதற்காக 557 மீனவர்கள் குடும்பங்களுக்கு ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் 6,220 கடலில் மிதக்கும் பாசி வளர்ப்பு மிதவை வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X