3776 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி; இணை இயக்குனர் அமுதவள்ளி தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

3776 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி; இணை இயக்குனர் அமுதவள்ளி தகவல்

Added : அக் 06, 2021
Share
சிவகங்கை : அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளியில் 3927 ஆசிரியர்களில் 3776 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என கல்வித்துறை (என்.எஸ்.எஸ்., திட்டம்) இணை இயக்குனர் அமுதவள்ளி தெரிவித்தார்.கொரோனா தளர்வுக்கு பின் அடுத்தமாதம் ஒன்று முதல் 8 ம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கின்றன. முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட

சிவகங்கை : அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளியில் 3927 ஆசிரியர்களில் 3776 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என கல்வித்துறை (என்.எஸ்.எஸ்., திட்டம்) இணை இயக்குனர் அமுதவள்ளி தெரிவித்தார்.

கொரோனா தளர்வுக்கு பின் அடுத்தமாதம் ஒன்று முதல் 8 ம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கின்றன. முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் அமுதா, சண்முகநாதன், சங்கு முத்தையா, ஒருங்கிணைந்த கல்வி திட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ பங்கேற்றனர்.

3776 ஆசிரியர்களுக்கு தடுப்பூசிஇணை இயக்குனர் அமுதவள்ளி கூறியதாவது,நவ., 1 முதல் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் திறக்கின்றன. பள்ளிகள் சுத்தம் செய்யும் பணி, பள்ளி மின்வயர்களில் மின் கசிவு உள்ளதா. அப்படி இருந்தால் அவற்றை சரி செய்தல் பணி நடக்கிறது. மாணவர் எண்ணிக்கைப்படி இரண்டு ஷிப்ட்படி வகுப்பு நடத்தப்படும். அதிக மாணவர் உள்ள பள்ளிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்பு நடக்கும்.

குடிநீர், மதிய உணவினை மாணவர்களே எடுத்து வர வேண்டும். தெர்மல் ஸ்கேன்' கருவி மூலம் சோதித்த பின்பே பள்ளிக்குள் அனுமதிப்போம். முகக்கவசம், சானிடைசரில் கை சுத்தம் கட்டாயம். பள்ளிகளில் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அலைபேசி எண் இருக்கும். ஏதேனும் அறிகுறி தென்பட்டால் டாக்டர் பரிசோதிப்பார். கொரோனா தொற்று ஏற்பட்ட ஆசிரியர், மாணவருக்கு விடுமுறை தரப்படும். தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 3927 ஆசிரியர்களில் 3776 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இருதய கோளாறு, கொரோனா தொற்று உள்ள 151 பேர் தடுப்பூசி போடவில்லை என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X