பொது செய்தி

தமிழ்நாடு

அங்கீகாரம் பெறாமல் மருத்துவம் பார்த்தால் கடும் நடவடிக்கை: எஸ்.பி., எச்சரிக்கை

Added : அக் 06, 2021
Share
Advertisement
சின்னசேலம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாமல் மருத்துவம் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., ஜியாவுல்ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:சின்னசேலம் அடுத்த பாண்டியன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண் சந்திரலேகா என்பவர் சின்னசேலம் தனியார் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளார்.அப்போது,
 அங்கீகாரம் பெறாமல் மருத்துவம் பார்த்தால் கடும் நடவடிக்கை: எஸ்.பி., எச்சரிக்கை

சின்னசேலம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாமல் மருத்துவம் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., ஜியாவுல்ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:சின்னசேலம் அடுத்த பாண்டியன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண் சந்திரலேகா என்பவர் சின்னசேலம் தனியார் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளார்.அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர் குழந்தையின் வளர்ச்சி சரியில்லை எனக்கூறி கடந்த 30ம் தேதி, கருக்கலைப்பு மற்றும் குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளார்.அறுவை சிகிச்சைக்குப்பின் ரத்தம் வெளியேறியதால், ஆபத்தான நிலையில் இருக்கும் சந்திரலேகாவின் உடலை வைத்து, உறவினர்கள் நேற்று முன்தினம் சின்னசேலத்தில் மறியலில் ஈடுபட்டனர்.விசாரணையில், சின்னசேலத்தில் உள்ள அந்த தனியார் மருத்துவமனை அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது.

உடனடியாக சின்னசேலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் அந்த மருத்துவமனை நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின் வருவாய்துறையினர் மூலம் அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் யாரேனும் உரிய அங்கீகாரம் பெறாமல் மருத்துவம் பார்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X