பொது செய்தி

தமிழ்நாடு

அழிந்து வரும் கைத்தறி நெசவு தொழில்

Added : அக் 06, 2021
Share
Advertisement
சிவகங்கை : அழிந்து வரும் கைத்தறி நெசவு தொழிலால் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கஉறுப்பினர்கள் வாழ்வாதாரம் இழந்துதவித்து வருகின்றனர். தமிழகத்தில் கைத்தறி தொழில் கொஞ்சம்,கொஞ்சமாக அழிந்து வருகிறது.சிவகங்கைபுவிசார் குறியீடு பெற்ற செட்டி நாடு கண்டாங்கி சேலை, காஞ்சிபுரம், திருப்புவனம் பட்டு, சென்னிமலை போர்வைகள், நாகர்கோவில் வேட்டி, துண்டுகள், மதுரை சுங்குடி சேலைகள் என

சிவகங்கை : அழிந்து வரும் கைத்தறி நெசவு தொழிலால் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கஉறுப்பினர்கள் வாழ்வாதாரம் இழந்துதவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கைத்தறி தொழில் கொஞ்சம்,கொஞ்சமாக அழிந்து வருகிறது.சிவகங்கைபுவிசார் குறியீடு பெற்ற செட்டி நாடு கண்டாங்கி சேலை, காஞ்சிபுரம், திருப்புவனம் பட்டு, சென்னிமலை போர்வைகள், நாகர்கோவில் வேட்டி, துண்டுகள், மதுரை சுங்குடி சேலைகள் என கைத்தறியில் பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.பாரம்பரிய கைத்தறி நெசவு தொழிலில் இன்று தமிழகம் முழுவதும் 1.5லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். 1376 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இருந்தும் கைத்தறி பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பின்காரணமாக உற்பத்தி விலையில் 40 சதவீதம் உயர்கிறது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மீதே இந்த வரி உயர்வு திணிக்கப்படுகிறது.பொருட்களை வாங்கும் மக்கள் மீது இந்த விலை உயர்வு திணிக்கப்படுகிறது. காரைக்குடியில் மட்டும் 70 கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வந்தன. 700 குடும்பங்கள் கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டன. கைத்தறி நெசவு தொழில் நடந்த பகுதிகளான காரைக்குடி கருணாநிதி காலனி, வைத்தியலிங்கபுரம், வீரபாண்டி கண்மாய், செக்கடி கோயில் நெசவாளர்கள் காலனி, கோவிலுார் ஆகிய பகுதிகளில் பல கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்து மூடப்பட்டுள்ளன. இதனால் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

எஸ்.பழனியப்பன், ராஜிவ்காந்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் தெரிவித்ததாவது: கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்து மூடப்பட்டு வருகின்றன. நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கைத்தறி உற்பத்திக்கு ஜி.எஸ்.டி., வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மானிய விலையில் மூலப்பொருட்கள் வழங்க வேண்டும். நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பெறப்பட்டுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கைத்தறி உற்பத்திகளை சந்தைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X