சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலைமை ஆசிரியரை மாற்ற போராட்டம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
மானாமதுரை : கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் இங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றும் சேவியர் ஆரோக்கிய தாஸ் மாணவர்களிடம் அதிக கட்டணம் வாங்குவதாகவும்,ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும் அவரை மாற்ற வேண்டும் எனக் கூறி பள்ளி வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தலைமை ஆசிரியர்

மானாமதுரை : கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் இங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றும் சேவியர் ஆரோக்கிய தாஸ் மாணவர்களிடம் அதிக கட்டணம் வாங்குவதாகவும்,ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும் அவரை மாற்ற வேண்டும் எனக் கூறி பள்ளி வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை ஆசிரியர் சேவியர் ஆரோக்கிய தாஸிடம் கேட்ட போது,நான் இங்கு பணியில் சேரும் போது 110 மாணவர்கள் படித்தனர்.தற்போது இங்கு ஆங்கில வழி கல்வியும் நடத்தப்படுவதால் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சில பள்ளிகளின் வருமானம் பாதிக்கப்படுவதால் சிலர் பணம் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட வைக்கின்றனர். ஆசிரியர்களை உரிய நேரத்தில் பள்ளிக்கு வர சொன்னதாலும்,மாணவர்களுக்கு உரிய நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க சொன்னதாலும் அவர்கள் என் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியால் தரக்குறைவாக பேசுவதாக புகார் கூறி வருகின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X