பொது செய்தி

தமிழ்நாடு

செயற்கை ஆக்சிஜன் உற்பத்தி மையம்; பிரதமர் மோடி நாளை துவக்குகிறார்

Added : அக் 06, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை பிரதமர் மோடி நாளை (அக்.7) காலை காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.கொரோனா இரண்டாம் அலைப் பாதிப்பின் போது பெரும்பாலானமருத்துவமனைகளில் செயற்கை சுவாசத்திற்கானஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை போக்கும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் திரவ நிலை

ராமநாதபுரம் : நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை பிரதமர் மோடி நாளை (அக்.7) காலை காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.

கொரோனா இரண்டாம் அலைப் பாதிப்பின் போது பெரும்பாலானமருத்துவமனைகளில் செயற்கை சுவாசத்திற்கானஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை போக்கும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் திரவ நிலை ஆக்சிஜன் டேங்க் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. ஏற்கனவே, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 11 ஆயிரம் கிலோ லிட்டர் திரவநிலை ஆக்சிஜன் டேங்க் அமைக்கப்பட்டது.

அதன் அருகில் காற்றில் இருந்து ஆக்சிஜனை பிரித்தெடுத்து நோயாளிகளுக்கு வழங்கும் வகையில் நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன்உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது.நாட்டின் ராணுவ ஆய்வு மேம்பாட்டு கழகம் சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நாளை(அக்.7) திறந்து வைக்கிறார். மாவட்டத்தில் பரமக்குடி அரசு மருத்துவமனையிலும் இதே போன்ற ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறந்து வைக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X