பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி பணியாளர்களுக்கு கணினி முறையில் பணி ஒதுக்கீடு

Added : அக் 06, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச் சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கணினி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இன்று 6ம் தேதி மற்றும் வரும் 9ம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக திருக்கோவிலுார், ரிஷிவந்தியம், திருநாவலுார் மற்றும் உளுந்துார்பேட்டை ஆகிய ஒன்றியங்களுக்கு நடக்கிறது.இதனையொட்டி,
 ஓட்டுச்சாவடி பணியாளர்களுக்கு கணினி முறையில் பணி ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி : உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச் சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கணினி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இன்று 6ம் தேதி மற்றும் வரும் 9ம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக திருக்கோவிலுார், ரிஷிவந்தியம், திருநாவலுார் மற்றும் உளுந்துார்பேட்டை ஆகிய ஒன்றியங்களுக்கு நடக்கிறது.இதனையொட்டி, ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட சுழற்சி முறையிலான கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தேர்தல் பொது பார்வையாளர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். கலெக்டர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். திட்ட இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X