பொது செய்தி

தமிழ்நாடு

நகைக்கடன் தள்ளுபடியில் குழப்பம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
சிவகங்கை : நகைக்கடன் தள்ளுபடியில் கூட்டுறவு வங்கிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. பயனாளிகளுக்குநகைகளை திருப்ப வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பியதால் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்ட 40 கிராமுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். நகைக்கடன் பெற்றவர்கள் கடன்

சிவகங்கை : நகைக்கடன் தள்ளுபடியில் கூட்டுறவு வங்கிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. பயனாளிகளுக்குநகைகளை திருப்ப வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பியதால் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்ட 40 கிராமுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடியாகும் என்பதால் மகிழ்ச்சியில் இருந்தனர்.கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளதில் முறைகேடு நடந்துள்ளதால், விசாரணை செய்த பின்புகடன் தள்ளுபடி செய்யப்படும், என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் குன்றக்குடி கூட்டுறவு வங்கியில் ஒரே நபர் பெயரில் பல முறை 65 லட்ச ரூபாய் பெறப்பட்டது கண்டறியப்பட்டது. வங்கி செயலர், நகை மதிப்பீட்டாளர், காசாளர் என மூன்று பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அதன் பின்பு நகைக்கடன் தள்ளுபடி குறித்து எந்த விதிமுறைகளையும் அரசு வங்கிகளுக்கு தெரிவிக்கவில்லை. நகைக்கடன் குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லாதநிலையில் சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்தநகைகளை 10 நாட்களில் திருப்ப வேண்டும். தவறும் பட்சத்தில் நகைகள் ஏலம் விடப்படும், என வங்கிகள் கடன் பெற்றவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.நகைக்கடன் தள்ளுபடியாகும் என்ற எண்ணத்தில் இருந்தவர்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளதால் கடும் குழப்பத்தில் மக்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X