சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேவகோட்டை கோயில்களில் தொடர் கொள்ளை

Added : அக் 06, 2021
Share
Advertisement
தேவகோட்டை : தேவகோட்டை கோயில்களில் கொள்ளை தொடர் கதையாகி வரும் நிலையில் கொள்ளையரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.தேவகோட்டை அருகே உள்ள கொத்தங்குடி இடையன்காளி கோயிலில் 2019 ஏப். 27 ல் கதவை உடைத்து ரூ. 15 லட்சம் பெறுமான தங்க சங்கிலி, வெள்ளி பொருட்களை மூன்று பேர் கொள்ளையடித்து சென்றனர். கடியாவயல் கிராம கோயிலில் உண்டியலை கொள்ளையடித்து சென்றனர். ஆறு மாதங்களுக்கு

தேவகோட்டை : தேவகோட்டை கோயில்களில் கொள்ளை தொடர் கதையாகி வரும் நிலையில் கொள்ளையரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

தேவகோட்டை அருகே உள்ள கொத்தங்குடி இடையன்காளி கோயிலில் 2019 ஏப். 27 ல் கதவை உடைத்து ரூ. 15 லட்சம் பெறுமான தங்க சங்கிலி, வெள்ளி பொருட்களை மூன்று பேர் கொள்ளையடித்து சென்றனர். கடியாவயல் கிராம கோயிலில் உண்டியலை கொள்ளையடித்து சென்றனர். ஆறு மாதங்களுக்கு முன்பு தேவகோட்டை நகர் இறகுசேரி பிடாரி காளி அம்மன் கோயிலில் உண்டியலை அப்படியே கொள்ளை கும்பல் எடுத்து சென்றது.

சில நாட்களுக்கு முன்பு தாழையூரில் கூத்தாடி முத்து பெரிய நாயகி அம்மன் கோயிலை உடைத்து உண்டியலை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தேவகோட்டை இறகுசேரி பத்ரகாளியம்மன் கோயிலில் கதவை உடைத்து ஒரு லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி, வெள்ளி சூலாயுதம் மற்றும் சில பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சிசிடிவி கேமிராவில் மூன்று பேர் வந்தது தெரிகிறது.

அனைத்து கோயில் கொள்ளை சம்பவத்திலும் 3 பேர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள கோயில்களில் தான் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.பதிவுகள் கொடுக்கப்பட்டும் கொள்ளையர்களை பிடிப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X