சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோட்டை மறித்து காங்., ஆர்ப்பாட்டம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
சிவகங்கை : உத்திர பிரதேசத்தில் காங்., பொது செயலாளர் பிரியங்கா கைது செய்ததை கண்டித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் காங்., கட்சியினர் ரோட்டை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜரத்தினம், துரைசிங்கம், மகளிரணி மாநில துணை

சிவகங்கை : உத்திர பிரதேசத்தில் காங்., பொது செயலாளர் பிரியங்கா கைது செய்ததை கண்டித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் காங்., கட்சியினர் ரோட்டை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜரத்தினம், துரைசிங்கம், மகளிரணி மாநில துணை தலைவர் ஸ்ரீவித்யா, மாவட்ட தலைவர் ஏலம்மாள், மாவட்ட துணை தலைவர் சண்முகராஜன், மூத்த நிர்வாகி முருகேசன், நகர் நிர்வாகி விஜயகுமார் உட்பட மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். நகர் தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.

பாதுகாப்பு மறந்த போலீஸ்காங்., ஆர்ப்பாட்டத்திற்கு சிவகங்கை நகர் போலீசார் ஒருவர் கூட பாதுகாப்பு பணியில் இல்லை. இதனால் கட்சியினர் திருப்புத்துார் ரோட்டை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். எஸ்.பி., அதிரடிப்படை போலீசார் வந்ததும் ரோட்டை மறிக்காமல் ஆர்ப்பாட்டம் செய்ய வலியுறுத்தப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X