பொது செய்தி

இந்தியா

எம்.ஐ.டி., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில், சென்னை இ.பி.ஐ. சோர்ஸ் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.நிறுவன மனிதவள துறை மேலாளர் ரமேஷ், சுஜய் மற்றும் குழுவினர் நிறுவனத்தின் விவரங்கள், வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் குறித்து விளக்கினர்.எழுத்து மற்றும் நேர்முகத்

புதுச்சேரி : கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில், சென்னை இ.பி.ஐ. சோர்ஸ் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

நிறுவன மனிதவள துறை மேலாளர் ரமேஷ், சுஜய் மற்றும் குழுவினர் நிறுவனத்தின் விவரங்கள், வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் குறித்து விளக்கினர்.எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்விக்குழும தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் துவக்கி வைத்தார்.அனைத்து துறைகளின் வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில், புதுச்சேரி, தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 780 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அதில், 210 பேர் வேலை வாய்ப்பு பெற்றனர்.ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X