கடன் பிரச்னை: பெண் தீக்குளிப்பு| Dinamalar

கடன் பிரச்னை: பெண் தீக்குளிப்பு

Added : அக் 06, 2021
தேவகோட்டை : தேவகோட்டை அருகே டி.சிறுவனுாரைச் சேர்ந்தவர் சரவணன். 35. இவரது மனைவி சூர்யா. 28. திருமணமாகி ஐந்து ஆண்டு ஆகிறது. இரு குழந்தைகள் உள்ளனர். சரவணன் கடன் வாங்கிவெளிநாட்டில் வேலைக்கு சென்று விட்டு சில மாதங்களுக்கு முன் திரும்பி விட்டார்.வெளிநாடு செல்வதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை. கடன் தொல்லை அதிகரித்தது. இது தொடர்பாக கணவன் மனைவிடையே அடிக்கடி தகராறு

தேவகோட்டை : தேவகோட்டை அருகே டி.சிறுவனுாரைச் சேர்ந்தவர் சரவணன். 35. இவரது மனைவி சூர்யா. 28. திருமணமாகி ஐந்து ஆண்டு ஆகிறது.



இரு குழந்தைகள் உள்ளனர். சரவணன் கடன் வாங்கிவெளிநாட்டில் வேலைக்கு சென்று விட்டு சில மாதங்களுக்கு முன் திரும்பி விட்டார்.வெளிநாடு செல்வதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை. கடன் தொல்லை அதிகரித்தது. இது தொடர்பாக கணவன் மனைவிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனமுடைந்த மனைவி சூர்யா தனது உடலில் தீ வைத்து கொண்டார். மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X