பொது செய்தி

தமிழ்நாடு

நெல் வயல்களில் களைக்கொல்லி தெளிக்க அறிவுரை

Added : அக் 06, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் நடப்பாண்டில் 20 ஆயிரத்து 400 எக்டேரில் நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது.ஆனந்துார், சோழந்துார் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பிர்காக்களுக்கு உட்பட்ட பகுதிகளில், விதைப்பு செய்த நெல் வயல்களில் நெல் பயிர்கள் முளைத்துஉள்ளன. நெல் வயல்களில் பயிர்களுக்கு இடையூறாக உள்ள களைகளை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தாவிட்டால், 45 சதவீத மகசூல்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் நடப்பாண்டில் 20 ஆயிரத்து 400 எக்டேரில் நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆனந்துார், சோழந்துார் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பிர்காக்களுக்கு உட்பட்ட பகுதிகளில், விதைப்பு செய்த நெல் வயல்களில் நெல் பயிர்கள் முளைத்துஉள்ளன. நெல் வயல்களில் பயிர்களுக்கு இடையூறாக உள்ள களைகளை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தாவிட்டால், 45 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

களைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலெட்சுமி கூறுகையில், நெல் வயல்களில் உள்ள களைகளை கட்டுப்படுத்த இரண்டு வகையான களைக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. களைகள் முளைக்கும்முன்பு லேசான ஈரப்பதத்தில், நெல் விதைப்பு செய்த ஒரு வாரத்திற்குள், பூட்டாக்குளோர் 50 இ.சி., களைக்கொல்லியை ஏக்கருக்கு ஒரு லிட்டர் அளவில் மணலுடன் கலந்து வயலில் துாவ வேண்டும்.

இரண்டாவதாக களைகள்முளைத்து 20 முதல் 25 நாட்களில், பிஸ்பைரிபேக் சோடியம் 10 எஸ்.சி., ஏக்கருக்கு 100 மி.லி., அல்லது ஈத்தாக்சி சல்பியூரான் 15, ஏக்கருக்கு 50 கிராம் அல்லது பெனாக்ஜோப்ரோப் பி இதைல் 6.9 இ.சி., ஏக்கருக்கு 500 மில்லி லிட்டர் அளவில், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.களைக்கொல்லி மருந்து தெளிக்கும் போது வயல்களில் லேசான ஈரப்பதம் அல்லது தண்ணீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X