பொது செய்தி

இந்தியா

கவர்னர் தமிழிசையுடன் சிங்கப்பூர் துாதர் சந்திப்பு

Added : அக் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி : தென்னிந்தியாவிற்கான சிங்கப்பூர் துாதர், கவர்னர் தமிழிசை சந்தித்து பேசினார்.தென்னிந்தியாவிற்கான சிங்கப்பூர் துாதர் பாங் காக் தியான், நேற்று புதுச்சேரி வந்தார். ராஜ் நிவாசில் கவர்னர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.அப்போது, இரு தரப்பு நல்லுறவு, ஒத்துழைப்பு குறித்து இருவரும் கலந்துரையாடினர்.சிங்கப்பூர் பல ஆண்டுகளாக வணிகம், பண்பாட்டு
 கவர்னர் தமிழிசையுடன் சிங்கப்பூர் துாதர் சந்திப்பு

புதுச்சேரி : தென்னிந்தியாவிற்கான சிங்கப்பூர் துாதர், கவர்னர் தமிழிசை சந்தித்து பேசினார்.

தென்னிந்தியாவிற்கான சிங்கப்பூர் துாதர் பாங் காக் தியான், நேற்று புதுச்சேரி வந்தார். ராஜ் நிவாசில் கவர்னர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.அப்போது, இரு தரப்பு நல்லுறவு, ஒத்துழைப்பு குறித்து இருவரும் கலந்துரையாடினர்.சிங்கப்பூர் பல ஆண்டுகளாக வணிகம், பண்பாட்டு தளங்களில் இந்திய நாட்டோடும், மக்களோடும் நல்லுறவு கொண்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த அறிவியல், மருத்துவ ஆராய்ச்சி துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது, நீர் சேமிப்பு, நீர் மேலாண்மையில், சிங்கப்பூர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப் பட்டது.புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், கடற்கரை சுற்றுலா மேம்பாடு, கல்வி, தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகளில் உதவுவது குறித்து பேசப்பட்டது.இயற்கை வளம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படுவது, கடல் சீற்றங்கள், புயல் போன்ற இயற்கை பேரிடர் சூழல்களை எதிர் கொள்வதில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப் பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
06-அக்-202114:07:48 IST Report Abuse
vpurushothaman பரவாயில்லை அக்காஜி காலம் பொற்காலம்தான் புதுச்சேரிக்கு. ஆனால் இரட்டைக் குழந்தைகளில் புதுச்சேரிக் குழந்தைக்கு அதிக கவனம் செலுத்துவதாகத் தெரிகிறதே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X