170 மது பாட்டில்கள் பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

170 மது பாட்டில்கள் பறிமுதல்

Added : அக் 06, 2021
Share
திருக்கனுார் : திருக்கனுாரில் இருந்து தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற 170 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு மணலிப்பட்டு எல்லைப் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

திருக்கனுார் : திருக்கனுாரில் இருந்து தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற 170 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு மணலிப்பட்டு எல்லைப் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக மோட்டார் பைக்கில் வந்த வாலிபர், போலீசாரை கண்டவுடன், கையில் வைத்திருந்த பையை சாலையில் போட்டு விட்டு தப்பிச் சென்றார்.போலீசார், வாலிபர் வீசி சென்ற பையை சோதனை செய்தனர்.அதில் தமிழக பகுதிக்கு கடத்துவதற்காக 170 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X