பொது செய்தி

இந்தியா

பட்டயக் கணக்காளர் தேர்வில் ஆதித்யா பள்ளி மாணவர்கள் சாதனை

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் நடத்திய பட்டயக் கணக்காளர் பதவிக்கான நுழைவுத் தேர்வில், புதுச்சேரி ஆதித்யா பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தால் நடத்தப்படும், பட்டயக் கணக்காளர் பதவிக்கான நுழைவுத் தேர்வு, இந்தியா முழுவதும் பல நகரங்களில் கடந்த ஜூலை மாதம் நடந்தது.இந்த நுழைவுத் தேர்வு, முதல்நிலை,

புதுச்சேரி : இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் நடத்திய பட்டயக் கணக்காளர் பதவிக்கான நுழைவுத் தேர்வில், புதுச்சேரி ஆதித்யா பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தால் நடத்தப்படும், பட்டயக் கணக்காளர் பதவிக்கான நுழைவுத் தேர்வு, இந்தியா முழுவதும் பல நகரங்களில் கடந்த ஜூலை மாதம் நடந்தது.இந்த நுழைவுத் தேர்வு, முதல்நிலை, இடைநிலை, முதுநிலை என மூன்று நிலைகளை கொண்டது.இத்தேர்வில், புதுச்சேரி ஆதித்யா பள்ளியில் வணிகவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்ற கிருபாகரன், ஸ்ரீஅமுருதா, வர்ஷா, காவியா ஆகியோர் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று, இடைநிலை தேர்விற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

மாணவன் கிருபாகரன் 400க்கு 296 மதிப்பெண்களுடன் சிறப்பு வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். சாய் சத்தியா, நிலவரசி ஆகிய இருவரும் இரண்டாம் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி நிறுவனர் ஆனந்தன் சால்வை அணிவித்து, பாராட்டினார்.பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீ வித்யநாராயணா அறக்கட்டளை அறங்காவலர் அனுதா பூனமல்லி ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர்.பள்ளி முதல்வர், இயக்குநர்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X