கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கு நெட்டப்பாக்கம் ஆணையர் எச்சரிக்கை

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து பகுதியில் உரிமம் இன்றி இயக்கப்பட்ட கழிவுநீர் அகற்றும் வாகனங்களை ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.நெட்டப்பாக்கம் கொம்யூனுக்கு உட்பட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.இந்த இடங்களில் இருந்து அகற்றப்படும் செப்டிக் டேங்க்

புதுச்சேரி : நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து பகுதியில் உரிமம் இன்றி இயக்கப்பட்ட கழிவுநீர் அகற்றும் வாகனங்களை ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நெட்டப்பாக்கம் கொம்யூனுக்கு உட்பட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.இந்த இடங்களில் இருந்து அகற்றப்படும் செப்டிக் டேங்க் கழிவுகளை, கழிவுநீர் அகற்றும் வாகனங்களில் எடுத்துச் சென்று, அப்பகுதியில் உள்ள ஏரி வாய்க்கால், சாலை ஓரங்களில் கொட்டப்படுகிறது.இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது.இதுகுறித்த புகார்களின்பேரில், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அப்பகுதியில் இயக்கப்பட்ட கழிவுநீர் அகற்றும் வாகனங்களை தடுத்து நிறுத்தி திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

வாகனங்களுக்கான ஆவணங்கள் சரியாக உள்ளதா என சோதனை செய்யப்பட்டது. கொம்யூன் பஞ்சாயத்து உரிமம் இன்றி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஆணையர் ஜெயக்குமார் கூறுகையில், 'கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் கொம்யூன் பஞ்சாயத்து உரிமம் பெற்று, அகற்றும் கழிவுநீரை, கருவடிக்குப்பத்தில் இயங்கி வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கொட்ட வேண்டும். அதனை மீறி செயல்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X