பொது செய்தி

இந்தியா

யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில், மாநில அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது.புதுச்சேரியில், சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம், தேசிய யோகாசன கூட்டமைப்பு இணைந்து, மாநில அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி நடத்த உள்ளனர்.இப்போட்டி, பாரம்பரிய யோகா, கலை யோகா, ரித்தமிக் யோகா ஆகிய மூன்று வகையாக நடத்தப்படும். போட்டிகள் சப் ஜூனியர் (9 முதல் 14 வயது வரை), ஜூனியர் (14

புதுச்சேரி : புதுச்சேரியில், மாநில அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது.

புதுச்சேரியில், சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம், தேசிய யோகாசன கூட்டமைப்பு இணைந்து, மாநில அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி நடத்த உள்ளனர்.இப்போட்டி, பாரம்பரிய யோகா, கலை யோகா, ரித்தமிக் யோகா ஆகிய மூன்று வகையாக நடத்தப்படும். போட்டிகள் சப் ஜூனியர் (9 முதல் 14 வயது வரை), ஜூனியர் (14 முதல் 18 வயது வரை), சீனியர் (18 வயதிற்கு மேற்பட்டவர்கள்) என மூன்று பிரிவுகளாக நடத்தப்படும்.

ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க விரும்புவோர், விண்ணப்ப படிவத்தை https://forms.gle/Kfb8iNZ8V6SBs38P7 என்ற இணையதளத்தில் நாளை 7ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.மேலும் விவரங்களுக்கு சதீஷ்குமார் (98944 00746), டாக்டர் பாலாஜி (99945 13634), விஜயகுமாரி (87781 43439) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை சித்தர் பூமி புதுச்சேரி யோகாசன விளையாட்டு சங்கத் தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X