பொது செய்தி

இந்தியா

புதுச்சத்திரத்தில் இடி தாக்கி மீனவர் சாவு: 16 பேர் காயம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுச்சத்திரம் : வலையில் இருந்து மீன் பிரித்து எடுத்த மீனவர் மின்னல் தாக்கி இறந்தார். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.கடலுார் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 65; இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன் பிடித்து நேற்று கரைக்கு வந்தனர். காலை 9 மணியளவில் மழை பெய்த போது, வலையிலிருந்த மீன்களை பிரித்துக் கொண்டிருந்தனர்.

புதுச்சத்திரம் : வலையில் இருந்து மீன் பிரித்து எடுத்த மீனவர் மின்னல் தாக்கி இறந்தார்.

மேலும் 16 பேர் காயமடைந்தனர்.கடலுார் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 65; இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன் பிடித்து நேற்று கரைக்கு வந்தனர். காலை 9 மணியளவில் மழை பெய்த போது, வலையிலிருந்த மீன்களை பிரித்துக் கொண்டிருந்தனர். காலை 9.30 மணிக்கு பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியது

.இதில் பாலகிருஷ்ணன், ராமலிங்கம், காளியப்பன், பொன்னம்பலம் உட்பட 17 மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களை கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாலகிருஷ்ணன் இறந்தார். ராமலிங்கம், காளியப்பன், பொன்னம்பலம் உட்பட 16 மீனவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X