அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்ற வேண்டாம்: வானதி காட்டம்

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
திருப்பூர் : ''நீட் தேர்வு விவகாரத்தில் மக்களையும் மாணவர்களையும் தி.மு.க. ஏமாற்ற வேண்டாம்'' என பா.ஜ. மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ. சார்பில் பிரதமர் மோடியின் 20 ஆண்டு மக்கள் பணியை பெருமைப்படுத்தும் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியதாவது: உ.பி. வன்முறை தொடர்பாக
NEET exam, Vanathi Srinivasan, BJP, medical entrance test,நீட்

திருப்பூர் : ''நீட் தேர்வு விவகாரத்தில் மக்களையும் மாணவர்களையும் தி.மு.க. ஏமாற்ற வேண்டாம்'' என பா.ஜ. மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ. சார்பில் பிரதமர் மோடியின் 20 ஆண்டு மக்கள் பணியை பெருமைப்படுத்தும் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியதாவது: உ.பி. வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


latest tamil news



வேளாண் திருத்த சட்டத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. காங். ஆட்சி செய்த காலத்தில் தான் வேளாண் சட்டங்களுக்கான அடிப்படை தரவுகள் சேகரிக்கப்பட்டு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என பரிந்துரைத்தது. தற்போது சட்டத்தை கொண்டு வந்த பின் எதிர்க்கின்றனர். 'நீட்' தேர்வு சுப்ரீம் கோர்ட்டால் அங்கீகரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. மாணவர்களை ஏமாற்றாமல் யதார்த்தத்தை தி.மு.க. சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-அக்-202119:18:07 IST Report Abuse
பேசும் தமிழன் அவர்களிடம் நீட் ரத்து செய்யும் மந்திரம் உள்ளது.... மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கியாகி விட்டது... அடுத்து... பஞ்சாயத்து தேர்தலில் ஓட்டு கேட்கும் போது.. அதே பழைய டயலாக்கை மறுபடியும் சொன்னால்... மக்கள் ஓட்டு போட்டு விட போகிறார்கள்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
06-அக்-202115:40:59 IST Report Abuse
Vena Suna வானதி அழகு,அறிவு,திறமையில் ஜெயலலிதா போல உள்ளார். முதல்வர் ஆக திறமை உள்ளது.
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
06-அக்-202115:01:46 IST Report Abuse
ஜெயந்தன் திமுக தமிழ் நாட்டு மக்களை ஏமாத்துது ......ஒருத்தர் மொத்த இந்தியாவையும் ஏமாத்துறாரு .. அம்மணி அப்படியே அவருக்கும் சொன்னால் நன்றாக இருக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X