பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீட்டு விண்ணப்பத்தில் தவறுகள் நேரக்கூடாது

Added : அக் 06, 2021
Share
Advertisement
மதுரை : ''பயிர் காப்பீட்டு விண்ணப்பத்தில் விவசாயிகளின் பெயர், ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்ற தகவல்களை பதிவிடுவதில் தவறுகள் நேரக்கூடாது,'' என மதுரையில் நடந்த திருந்திய பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.வேளாண் உதவி இயக்குனர் மயில் வரவேற்றார். இணை இயக்குனர் விவேகானந்தன் பேசுகையில், ''2016-17 முதல் தற்போது வரை பிரதமரின் திருந்திய

மதுரை : ''பயிர் காப்பீட்டு விண்ணப்பத்தில் விவசாயிகளின் பெயர், ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்ற தகவல்களை பதிவிடுவதில் தவறுகள் நேரக்கூடாது,'' என மதுரையில் நடந்த திருந்திய பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேளாண் உதவி இயக்குனர் மயில் வரவேற்றார். இணை இயக்குனர் விவேகானந்தன் பேசுகையில், ''2016-17 முதல் தற்போது வரை பிரதமரின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இம்மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.82 கோடி இழப்பீடு பெற்று தரப்பட்டுள்ளது. தற்போது ராபி சிறப்பு பருவத்திற்கு பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு வருவாய் கிராம அளவில் நவ.11, பருத்தி, மக்காச்சோளத்திற்கு பிர்கா அளவில் டிச.15க்குள் காப்பீடு செய்யலாம்'' என்றார்.கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி பேசுகையில்,''சொசைட்டியில் காப்பீடு செய்ய வரும் விவசாயிகளின் விண்ணப்பங்களை அன்றைக்கே பதிவு செய்ய வேண்டும்,'' என்றார். மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் ஜீவா உள்ளிட்டோர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X