பாலத்திற்கு கீழ் மாடுகள் வளர்ப்பு தெருக்களில் குப்பை குவிப்பு; கஷ்ட நிலையில் கைலாசபுரம் மக்கள்

Added : அக் 06, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை பாலம் ஸ்டேஷன் ரோடு மேம்பாலத்திற்கு கீழ் மாடுகள் வளர்ப்பு, தெருக்களில் குப்பை குவிப்பு, பொங்கி வழியும் பாதாள சாக்கடை என பல ஆண்டுகளாக பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் தவிக்கின்றனர் மாநகராட்சி 7வது வார்டு கைலாசபுரம் பகுதி மக்கள்.இப்பகுதியில் பாதாள சாக்கடை குழாய்களில் அடிக்கடி ஏற்படும் அடைப்பால் கழிவுநீர் மேன்ஹோல் வழியாக பொங்கி தெருக்களில்

மதுரை : மதுரை பாலம் ஸ்டேஷன் ரோடு மேம்பாலத்திற்கு கீழ் மாடுகள் வளர்ப்பு, தெருக்களில் குப்பை குவிப்பு, பொங்கி வழியும் பாதாள சாக்கடை என பல ஆண்டுகளாக பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் தவிக்கின்றனர் மாநகராட்சி 7வது வார்டு கைலாசபுரம் பகுதி மக்கள்.

இப்பகுதியில் பாதாள சாக்கடை குழாய்களில் அடிக்கடி ஏற்படும் அடைப்பால் கழிவுநீர் மேன்ஹோல் வழியாக பொங்கி தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கழிவுநீர் செல்லும் வழிகளில் சுகாதாரசீர்கேடு நிலவுகிறது. அவ்வப்போது அடைப்புகளை சரி செய்தாலும் ஓரிரு நாட்களில் மீண்டும் அடைப்புகள் ஏற்படுகின்றன. நிரந்தர தீர்வு இல்லை. செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோடு பாலத்தின் கீழ் பகுதி மாடுகள் கொட்டமாக மாறியுள்ளது. மாடுகள் ரோடுகளில் திரியும் போது வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுகிறது.எரியாத தெருவிளக்குகள்கணேசன், பாலம் ஸ்டேஷன் ரோடு: தெருவில் இருந்த 3 தெருவிளக்குகளில் ஒன்று மாயமாகி விட்டது.

மற்ற இரண்டும் எரியவில்லை. குலமங்கலம் - பாலம் ஸ்டேஷன் ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. குடிநீர், பாதாள சாக்கடை வசதிகள் பெரிய அளவில் இல்லை. கொசு தொல்லையால் நிம்மதியாக துாங்க முடியவில்லை.குடிநீரில் கலக்கும் கழிவுநீர்ராமசுப்பிரமணியன், கைலாசபுரம்: இப்பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் குடிநீருடன் கலப்பதை பல முறை மாநகராட்சிக்கு சுட்டிக்காட்டியும் நடவடிக்கை இல்லை. குப்பை தொட்டிகள் இருந்தாலும் அதில் சேரும் குப்பைகளை முறையாக அகற்றுவது இல்லை. தெருக்களில் குப்பை குவிந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X