தமிழ்நாடு

மதுரையில் ரோடுகளை சீரமைக்க வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : அக் 06, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் ரோடுகளை சீரமைக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக அரசு நகர்ப்புற மேம்பாடு உட்பட பல்வேறு பணிக்காக உலக வங்கியிடம் ரூ.3 ஆயிரத்து 381 கோடி கடன் பெற்றது. இதில் மாநகராட்சி பகுதி சேதமுற்ற ரோடுகளை சீரமைக்க ரூ.19.94 கோடி ஒதுக்கப்பட்டது. மாநகராட்சி

மதுரை : மதுரையில் ரோடுகளை சீரமைக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக அரசு நகர்ப்புற மேம்பாடு உட்பட பல்வேறு பணிக்காக உலக வங்கியிடம் ரூ.3 ஆயிரத்து 381 கோடி கடன் பெற்றது. இதில் மாநகராட்சி பகுதி சேதமுற்ற ரோடுகளை சீரமைக்க ரூ.19.94 கோடி ஒதுக்கப்பட்டது. மாநகராட்சி தீர்மானத்தின்படி ஜனவரியில் டெண்டர் வெளியானது. ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டது.

பணி நிறைவேற வில்லை. மழைக்காலம் துவங்கிவிட்டது. ரோடு பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. சுகாதாரக்கேடு, விபத்துக்கள் ஏற்படுகிறது. சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு முத்துக்குமார் குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர், கமிஷனர், மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.,22 க்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X