வேலியே பயிரை மேய்ந்ததா? சீனாவுக்கு உதவிய அதிகாரி!

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
வாஷிங்டன் : ஐ.எம்.எப்., எனப்படும், பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனரான கிறிஸ்டலினா ஜார்ஜிவா மற்றும் சில அதிகாரிகள், சீனா மற்றும் சில நாடுகளின் வணிக தரவரிசையை உயர்த்தும் வகையில், தரவுகளை மாற்றும்படி உலக வங்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஒரு நாட்டின் வரிச் சுமைகள், அதிகார மட்டத்தின் தடைகள், ஒழுங்கு முறை அமைப்புகளின் செயல்பாடுகள்


வாஷிங்டன் : ஐ.எம்.எப்., எனப்படும், பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனரான கிறிஸ்டலினா ஜார்ஜிவா மற்றும் சில அதிகாரிகள், சீனா மற்றும் சில நாடுகளின் வணிக தரவரிசையை உயர்த்தும் வகையில், தரவுகளை மாற்றும்படி உலக வங்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.


latest tamil news



ஒரு நாட்டின் வரிச் சுமைகள், அதிகார மட்டத்தின் தடைகள், ஒழுங்கு முறை அமைப்புகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில், எளிதாக தொழில் செய்வதற்கான நாடுகளின் தரவரிசையை தயாரித்து உலக வங்கி வெளியிடுகிறது. முறைகேடுஇந்நிலையில் இந்த தர வரிசை தயாரித்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.



latest tamil news



உலக வங்கியின், 'தொழில் செய்தல் 2018' அறிக்கை குறித்து விசாரணை நடத்திய, 'வில்மெர்ஹேல்' எனும் சட்ட நிறுவனம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம், ஐ.எம்.எப்., நிர்வாக குழுவினருக்கு அளித்துள்ள அறிக்கையில், பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனரான கிறிஸ்டலினா ஜார்ஜிவா மற்றும் சில அதிகாரிகள், சீனா மற்றும் சில நாடுகளின் வணிக தரவரிசையை உயர்த்தும் வகையில், தரவுகளை மாற்றும்படி உலக வங்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுகள், தங்கள் நாட்டுக்கான முதலீடுகளை ஈர்க்க, இந்த தரவரிசை பட்டியலை பயன்படுத்திக் கொள்வது உண்டு.இந்நிலையில் இந்த பட்டியலுக்கான தரவுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், ஐ.எம்.எப்., எனப்படும், பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனரான கிறிஸ்டலினா ஜார்ஜிவா ஜார்ஜிவா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


விளக்கம்


விரைவில் அவரையும் பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக குழுவினர் அழைத்து பேச இருப்பதாக தெரியவந்துள்ளது.ஆனால், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு களை ஜார்ஜிவா மறுத்து உள்ளார்.எந்த அறிக்கையையும் மாற்றுமாறு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், நிர்வாக குழுவினருடனான சந்திப்பில் இதை விளக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
06-அக்-202113:22:24 IST Report Abuse
M  Ramachandran கில்லாடி சீனன். எப்பேர்பாட்ட கீழ்தரமானா செயலுக்கும் அஞ்சாத கம்யூனிஸ்டுகள். அதனால் தான் ராஜாஜி கம்யூயூனிஸ்ட்டுகளை தமிழ்நாட்டிலிருந்து ஒளித்து கட்ட நினைத்தார். பாம்பய் விட அதிகம் விஷமுடையவர் இந்த தற்கால கம்யூனிஸ்டுகள்..
Rate this:
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
06-அக்-202114:19:21 IST Report Abuse
 N.Purushothamanஅவனுங்களுக்கு வேலை ஆகணும்ன்னா காட்டியும் கொடுப்பானுங்க ...தேவைப்பட்டால் இன்னும் பல காரியங்களும் செய்வாங்க .......
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
06-அக்-202119:06:46 IST Report Abuse
Hariகேரளா பினராய் மாடல் என சொல்லுங்க...
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
06-அக்-202113:21:11 IST Report Abuse
Anand இதற்கும் மோடிதான் காரணம், இப்படிக்கு திருட்டு திராவிஷம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
06-அக்-202112:13:14 IST Report Abuse
Ramesh Sargam ஒருவரின் மீது சந்தேகம் என்று ஒன்று வந்துவிட்டால், அப்படிப்பட்டவரை அந்த பதவியிலிருந்து உடனே தூக்க வேண்டும். அதுவும் சீனாவுக்கு துணைபோன அதிகாரி என்றால், அவர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X