கட்டுமான பொருட்கள் விலையை குறைக்க எதிர்பார்ப்பு! தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?| Dinamalar

தமிழ்நாடு

கட்டுமான பொருட்கள் விலையை குறைக்க எதிர்பார்ப்பு! தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

Added : அக் 06, 2021 | கருத்துகள் (1)
Share
மதுரை: தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் கட்டுமான பொருட்களின் விலையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.பெட்ரோல், டீசல் விலைஉயர்வை காரணம் காட்டி அனைத்து பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டுமானத்துறையில் செங்கல், சிமென்ட், கம்பிகள் விலை உயர்ந்துள்ளது. இவற்றின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க
கட்டுமான பொருட்கள் விலையை குறைக்க எதிர்பார்ப்பு! தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

மதுரை: தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் கட்டுமான பொருட்களின் விலையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


பெட்ரோல், டீசல் விலைஉயர்வை காரணம் காட்டி அனைத்து பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டுமானத்துறையில் செங்கல், சிமென்ட், கம்பிகள் விலை உயர்ந்துள்ளது. இவற்றின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை கட்டுமான பொருட்கள் விற்பனையாளர் சேதுராமன் கூறியதாவது: கொரோனா தொற்று குறைந்துள்ளதையடுத்து கட்டுமான தொழில் தற்போது மீண்டு வருகிறது. கட்டுமான பொருட்களின் விலையேற்றம் விற்பனையாளர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதிக்கிறது.

மதுரையில் நேற்று முன்தினம் ரூ.450 ஆக இருந்த ஒரு மூடை சிமென்ட் நேற்று நள்ளிரவு ரூ.515 ஆக, ஒரு கிலோ கட்டுமான கம்பிக்கு ரூ.5 வீதம் டன் கம்பிக்கு ரூ.5000 வரை உயர்ந்துள்ளது. கட்டுமான பொருட்களை வாங்க தயங்கும் பலர் பணிகளை நிறுத்தி விட்டனர். கொத்தனார், சித்தாள் உள்ளிட்ட பணியாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

விலையேற்றத்திற்காக கட்டுமான பொருட்களில் செயற்கை தட்டுப்பாட்டையும் உருவாக்கி வருகின்றனர். அரசு கட்டுமான பொருட்கள் தயாரிப்பு, விநியோகம், இருப்பு, விற்பனை போன்ற நடவடிக்கைகளை கண்காணித்து விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X