ஆமதாபாத் : ''குஜராத் நகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜ., பெற்ற அமோக வெற்றி, மக்கள் என்றும் பிரதமர் மோடியின் பக்கம் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளது,'' என, அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.
![]()
|
குஜராத் மாநிலம் காந்தி நகர் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 44 இடங்களில், ஆளும் பா.ஜ., 41 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்., இரு இடங்களிலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வென்றுள்ளன.
இது குறித்து, குஜராத் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான பூபேந்திர படேல் கூறியதாவது:காந்தி நகர் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.,வுக்கு வெற்றி தேடித் தந்த மக்களுக்கு நன்றி.
![]()
|
குஜராத் மக்கள் என்றுமே பிரதமர் மோடியின் பக்கம் தான் என்பதை இந்த வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது. கொரோனா காலத்திலும் பா.ஜ.,வினர் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.இதன் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது. குஜராத்தில் ஆம் ஆத்மியின் நாடகம் எடுபடாது; இங்கு மூன்றாவது கட்சிக்கு இடமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement