குஜராத் மக்கள் மோடியின் பக்கம்: முதல்வர் பூபேந்திர படேல் பெருமிதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

குஜராத் மக்கள் மோடியின் பக்கம்: முதல்வர் பூபேந்திர படேல் பெருமிதம்

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (14)
Share
ஆமதாபாத் : ''குஜராத் நகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜ., பெற்ற அமோக வெற்றி, மக்கள் என்றும் பிரதமர் மோடியின் பக்கம் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளது,'' என, அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகர் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 44 இடங்களில், ஆளும் பா.ஜ., 41 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்., இரு இடங்களிலும், ஆம் ஆத்மி

ஆமதாபாத் : ''குஜராத் நகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜ., பெற்ற அமோக வெற்றி, மக்கள் என்றும் பிரதமர் மோடியின் பக்கம் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளது,'' என, அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.



latest tamil news



குஜராத் மாநிலம் காந்தி நகர் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 44 இடங்களில், ஆளும் பா.ஜ., 41 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்., இரு இடங்களிலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வென்றுள்ளன.

இது குறித்து, குஜராத் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான பூபேந்திர படேல் கூறியதாவது:காந்தி நகர் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.,வுக்கு வெற்றி தேடித் தந்த மக்களுக்கு நன்றி.


latest tamil news



குஜராத் மக்கள் என்றுமே பிரதமர் மோடியின் பக்கம் தான் என்பதை இந்த வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது. கொரோனா காலத்திலும் பா.ஜ.,வினர் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.இதன் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது. குஜராத்தில் ஆம் ஆத்மியின் நாடகம் எடுபடாது; இங்கு மூன்றாவது கட்சிக்கு இடமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X