சிதைந்து கிடக்கும் சிமென்ட் சிலாப்: பயணிகள் கால்களை கிழிக்கும் கம்பி

Added : அக் 06, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : சிதைந்து கிடக்கும் சிமென்ட் சிலாப்கள், நடந்து வருபவர்கள் கால்களை பதம்பார்க்கும் இரும்புக்கம்பி, குப்பை வண்டிகளால் சுகாதரக்கேடு, மழை பெய்தால் சாக்கடை கழிவு என பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் பாதிப்பை சந்திக்கின்றனர்.இங்கு பஸ்கள் உள்ளே நுழையுமிடத்தில் இரும்பு குழாய் சிதைந்து காணப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்துார் : சிதைந்து கிடக்கும் சிமென்ட் சிலாப்கள், நடந்து வருபவர்கள் கால்களை பதம்பார்க்கும் இரும்புக்கம்பி, குப்பை வண்டிகளால் சுகாதரக்கேடு, மழை பெய்தால் சாக்கடை கழிவு என பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் பாதிப்பை சந்திக்கின்றனர்.

இங்கு பஸ்கள் உள்ளே நுழையுமிடத்தில் இரும்பு குழாய் சிதைந்து காணப்படுகிறது. அண்ணாத்துரை சிலை பின்புறம் நிறுத்தப்படும் குப்பை வண்டியில் பழக்கடை கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதாரக்கேடாக உள்ளது. மதுரை பஸ்கள் நிற்குமிடத்தில் கொசுக்கள் கடித்து குதறுகிறது.இங்கு சிமென்ட் சிலாப்புகள் சிதைந்து கிடப்பதால் அவசரத்தில் நடந்து வருவோர் தவறிவிழுகின்றனர்.

சாக்கடைகள் ஆக்கிரமிப்பால் மழை பெய்தால் பஸ் ஸ்டாண்டில் கழிவுநீர் தேங்குகிறது. பஸ் ஸ்டாண்ட் வடபகுதியில் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் டூவீலர்கள் நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பயணிகள் நிற்பதற்கு கூட இடமில்லை. பஸ் ஸ்டாண்டின் எதிர்ப்புறமுள்ள சாக்கடை அடிக்கடி நிரம்பி வழிகிறது.

இதுபோல் பாண்டியன் கிராம வங்கி அருகிலும் சாக்கடை அடைப்பட்டு கிடக்கிறது. ரோட்டில் பள்ளம் வேறு விழுந்து வருகிறது.அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை சுற்றிய சுவர்களில் வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பொலிவிழந்து காணப்படுகிறது. கூரையில் ஒட்டடைகள் பரவி சுத்தமில்லாமல் காணப்படுகிறது. இவ்வாறு பல்வேறு குறைகள் காணப்படும் பஸ்ஸ்டாண்டை தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் பல்வேறு சிரமங்களுடன் பயன்படுத்தி வருகின்றனர். இதை நகராட்சி நிர்வாகம் சீர் செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X