பள்ளி,கல்லுாரி செய்திகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி,கல்லுாரி செய்திகள்

Added : அக் 06, 2021
Share
நேர்காணல் சிறப்புக் கூட்டம்அருப்புக்கோட்டை: எஸ்.பி.கே. கல்லுாரியில் ஆங்கில துறை சார்பாக 'தற்குறிப்பு படிவம் தயாரிக்கும் முறை, நேர்காணலின் விதிமுறைகள் என்ற தலைப்பில் சிறப்பு கூட்டம் நடந்தது . எஸ். பி .கே., கல்வி குழும தலைவர் சுதாகர் ஆலோசனை வழங்கினார். முதல்வர் முத்துச்செல்வன் தலைமை வகித்தார். இணை பேராசிரியர் கமலேஸ்வரி வரவேற்றார். மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆங்கில

நேர்காணல் சிறப்புக் கூட்டம்

அருப்புக்கோட்டை: எஸ்.பி.கே. கல்லுாரியில் ஆங்கில துறை சார்பாக 'தற்குறிப்பு படிவம் தயாரிக்கும் முறை, நேர்காணலின் விதிமுறைகள் என்ற தலைப்பில் சிறப்பு கூட்டம் நடந்தது . எஸ். பி .கே., கல்வி குழும தலைவர் சுதாகர் ஆலோசனை வழங்கினார். முதல்வர் முத்துச்செல்வன் தலைமை வகித்தார். இணை பேராசிரியர் கமலேஸ்வரி வரவேற்றார். மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆங்கில துறை உதவி பேராசிரியர் சசிரேகா பேசினார். உதவி பேராசிரியர் பிரேமா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை தலைவர் ஜாக்குலின், உதவி பேராசிரியர் சஹானா செய்தனர்.

ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

சிவகாசி: அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி மகளிர் குழு சார்பில் மூன்று நாட்கள் இணைய வழியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. மதுரை காமராஜ் பல்கலை உதவி பேராசிரியர் தீபா, கர்நாடகா ஸ்ரீமதி தானம்மா சன்னப்பசவய்யா கல்லுாரி உதவி பேராசிரியர் சுஜாதா, சென்னை அகமத் சையத் மகளிர் கல்லுாரி உதவி பேராசிரியர் மரகதம் பேசினர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ரிபயா மீரா செய்தனர்.

நாட்டு நலப்பணி திட்ட விழா

விருதுநகர்: செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நாட்டு நல பணி திட்ட விழாவை முன்னிட்டு தேசிய அளவில் வினாடி வினா போட்டிகள் நடந்தது. கல்லுாரி முதல்வர் சுந்தரபாண்டியன் துவக்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆந்திரா, கேரளா, மகாராஸ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த மேற்பட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாட்டு நல பணி திட்ட அதிகாரிகள் புஷ்பவேணி, ஜீவா, மகாலெட்சுமி, பிரகாஷ், அருஞ்சுனைக்குமார், பரமேஸ்வரன், நாகராஜன் செய்தனர்.

சொற்பொழிவு நிகழ்ச்சி

சிவகாசி: காளீஸ்வரி கல்லுாரி ஆங்கிலத்துறை இலக்கிய மன்றம் சார்பில் கல்லுாரி உதவி பேராசிரியருக்கான தகுதித் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என்ற தலைப்பில், சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. மாணவி சங்கரரூபிணி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் பெமினா , உதவி பேராசிரியர் ஸ்வப்னா முன்னிலை வகித்தனர். சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி ஆங்கில துறை உதவி பேராசிரியர் ராஜா பேசினார் . மாணவர் ரஞ்சித் குமார் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X